paristamil

Vanakkam France

இந்தியா முழுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு : விரிவான தகவல்கள்

Wed, 25 Mar 2020 14:32:40 +0000

நேற்றிரவு எட்டு மணியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா நோய் தொற்றினை தடுக்க இந்தியா முழுமைக்கும் அடுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவினை அறிவித்துள்ளார். இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனக்கூறிய பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்றார். கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள்...

‘நாம் இப்போது போரிலிருக்கிறோம்’ – பிரெஞ்சு அதிபர் நாட்டு மக்களுக்கு உரை

Tue, 17 Mar 2020 01:32:33 +0000

பிரான்சில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பலதரப்பட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும் அதன் பாதிப்பு குறையவில்லை. நோய்தொற்றின் மூன்றாம் நிலையினை அடைந்துள்ள நிலையில் பிரான்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் திங்கள்கிழமை (16/03/2020) இரவு எட்டு மணியளவில் தொலைக்காட்சியில் மக்களுக்கு உரையாற்றினார். இவ்வுரை சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது. அவர் உரையிலிருந்து சில பகுதிகள் : ”இரண்டு நாட்களுக்கு முன்பு பிரெஞ்சு பிரதமர் எட்வார்ட் பிலிப் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு இணங்காமல் உண்மையில் ஒன்றுமே மாறாததைப்...

அங்காடிகளில் குவிந்த மக்கள் : ஊரடங்கு செய்தி எதிரொலி?

Mon, 16 Mar 2020 17:39:31 +0000

பிரான்சு தலைநகர் பாரீசில் தொடர்ந்து உயர்ந்துவரும் கொரோனா நோய்தொற்றினால் விரைவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்ற செய்தி பரவியதால் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்க அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில், தமிழ் கடைகளில் மக்கள் குழுமி வருகின்றனர். பிரான்சில் தற்போது வரை கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5423 என பிரான்சின் சுகாதர அமைச்சகம் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை (06/03/2020) முதல் பள்ளிகள் மறு உத்தரவு வரும்வரை மூடப்படுவதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மக்ரோன் பொதுமக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி...

அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டுகோள் : பிரான்சில் உயரும் கொரோனா வைரஸ் தொற்று !

Mon, 16 Mar 2020 17:10:45 +0000

கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் இரட்டிப்பாவதால் பாரீசை முழுவதுமாக மூடுவது குறித்து பிரெஞ்சு அரசாங்கம் இன்று பரிசீலித்தது. நேற்று ஆயிரக்கணக்கான பூங்காக்களையும், தலைநகரில் உள்ள செய்ன் (Seine) ஆற்றின் அருகேயும் பார்வையிட்ட பின் பேசிய நாட்டின் சுகாதார இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன் (Jérôme Salomon) ‘நிலைமை மிகவும் கவலையளிப்பதாகவும், மிக வேகமாக மோசமடைந்து வருவதாகவும்’ தெரிவித்தார். தற்போது வரை 5,437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 400க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில்...

பிரான்சிலிருந்து இந்தியா செல்பவர்களுக்கு புது கட்டுப்பாடுகள்….

Sun, 15 Mar 2020 18:08:47 +0000

பிரான்சிலிருந்து இந்தியா திரும்பும் மக்களுக்கான விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் இந்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி OCI வைத்திருப்பவர்களுக்கு இந்தியா செல்ல அனுமதியில்லை. அவர்களுக்கான விசா சில காலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் அறிவிப்புகளில் அது குறித்த விரிவான விவரங்களைக் காணலாம்.

பிரான்ஸ் : கொரோனா பரவலைத் தடுக்க நூறுக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடத் தடை!

Fri, 13 Mar 2020 17:37:33 +0000

நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோய் பரவுவதை தடுக்க நூறுக்கு மேற்பட்ட மக்கள் கூடும் கூட்டங்கள் அனைத்தையும் தடை செய்துள்ளதாக பிரெஞ்சு பிரதமர் தெரிவித்துள்ளார். பிரெஞ்சு பிரதமரான எதுவார் பிலிப் இதுகுறித்து தெரிவிக்கையில் இந்த நோய் தொற்றினை முடிந்தளவு குறைப்பதற்கான முயற்சியே இந்த அறிவிப்பு என்றார். இந்த அறிவிப்புக்கு முன்னர்தான் பிரெஞ்சு அதிபர் இம்மானுவெல் மக்ரோன் அனைத்து பள்ளிகளும் அடுத்த அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி மூடப்படும் என்ற அறிவித்தது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலை (வியாழக்கிழமை) உரையாற்றிய பிரான்சு...

பிரான்ஸ் : கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு!

Thu, 12 Mar 2020 14:52:57 +0000

மார்ச் 12, புதன்கிழமை: ஜனவரி 24 ஆம் தேதி ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் நோயாளர் பதிவுகளை உறுதிப்படுத்திய முதல் நாடு பிரான்ஸ் ஆகும். ஜனவரி பிற்பகுதியிலும் பிப்ரவரி மாத தொடக்கத்திலும் மொத்தம் 12 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் 11 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். தற்போது அவர்களனைவரும் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 81 வயதான சீன சுற்றுலா பயணியான 12 வது நபர் உயிரிழந்தார். புதிய நோயாளர் வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாமல்...

பிரான்சு நகரசபை தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் !

Wed, 11 Mar 2020 23:54:57 +0000

ஐரோப்பிய நாடான பிரான்சில் வருகின்ற மார்ச் 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அதன் அனைத்து மாநிலங்களிலும் நகரசபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றுபெறுபவர்கள் மேயர் (நகரத்தந்தை) மற்றும் கோன்சியே முனிசிபல் (Conseiller municipal) உள்ளிட்ட நகரசபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர். பிரான்சின் இல் தே பிரான்ஸ் (IL de France) மாநிலத்தில் 95 மாவட்டங்கள் உள்ளன. அதில் பெரும்பான்மை மாவட்டங்களில் பிரான்சு வாழ் தமிழர்கள் பலர் போட்டியிடுகின்றனர். குறிப்பாக செய்ன் சான் தெனி (Seine saint...

சென்னைக்கு புதிய விமான சேவை தொடங்குகிறது ஏர் ஃப்ரான்ஸ்

Tue, 03 Mar 2020 23:36:56 +0000

பிரபல பிரெஞ்சு விமான நிறுவனமான ஏர் பிரான்ஸ் தென்னிந்த நகரமான சென்னைக்கு பாரீசிலிருந்து விமான சேவையினை மீண்டும் துவக்கவுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் மூன்று பெரிய நகரங்களுக்கு விமானங்களை இயக்கிவரும் அந்நிறுவனம், அந்த நகரங்களின் எண்ணிக்கையை நான்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது. ஜூலை முதல் இச்சேவை தொடங்கவிருக்கும் நிலையில், ஒவ்வொரு பயணத்திலும் 837 பயணிகளை கொண்டு செல்ல முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு மூன்று விமானங்கள் தொடக்கத்தில் ஏர் பிரான்ஸ் தனது விமானங்களை பாரிசிலிருந்து சென்னைக்கு வாரத்திற்கு மூன்று முறை இருபுறமும்...

மெய்போலும்மே மெய்போலும்மே !

Tue, 22 Oct 2019 11:06:55 +0000

அண்மையில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் காத்திருப்பு என்ற தலைப்பில் என் கண்முண் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் ஒரு சிறுகதையை எழுதியிருந்தேன். அக்கதையை நண்பர் பஞ்சு,  சுருக்கமாக பாராட்டி இருந்தார். அவரை நண்பருக்கும் மேலாக எனது குடும்பத்தில் ஒருவராகப் பார்க்கிறேன்.  எனது தந்தையோ, தாயோ தமக்கையோ சகோதரரோ  என் பிள்ளைகளை குறை சொல்லி பார்த்த தில்லை. அதனால் எனது பிள்ளைகளிடத்தில் குறைகள் இல்லை  எனக்கூறவும் மாட்டேன். படைப்பு என்பது சுதந்திரமானது, படைப்பவனில் சிந்தனையில் எவ்வித குறுக்கீடுமின்றி தன்னை மகிழ்வித்துக்கொள்ளும் பொருட்டு...

djega.in franceindia.com