paristamil

Puducherry News | Puducherry News Today

சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா டெல்லியில் கைது

Wed, 16 Jun 2021 09:44:54 +0000

சென்னை கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இந்த புகாரினை தொடர்ந்து மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா […]

The post சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா டெல்லியில் கைது appeared first on Puducherry News | Puducherry News Today.

தமிழகத்தில் அரசு பஸ்கள் இயக்குவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Wed, 16 Jun 2021 09:32:47 +0000

சென்னை கொரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்கள் தயாராகி வருகின்றன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அத்தியாவசிய பணியாளர்களுக்கு தேவையான அளவில் பேருந்துகளை இயக்கி வருகிறோம். அதேபோல், பேருந்துகளில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, தமிழக அரசு […]

The post தமிழகத்தில் அரசு பஸ்கள் இயக்குவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Puducherry News | Puducherry News Today.

அரசு விழாவை சொந்தம் கொண்டாடும் பா.ஜ.க: காங்கிரஸ் உரிமை மீறல் புகார்

Wed, 16 Jun 2021 09:16:07 +0000

புதுச்சேரி மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்று வருகிறது. அதேபோல லாஸ்பேட்டையில் குறிஞ்சிநகர், ஜீவானந்தபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி முகாம் நடந்தது. அந்த இடங்களில் பா.ஜக.வினர் தங்கள் பேனர்களை வைத்த்துடன், கட்சிக் கொடிகளையும் பறக்க விட்டனர். அதுமட்டுமல்லாமல் அந்த முகாம்களை பா.ஜ.கவின் மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்நிலையில் நேற்று காலை செல்லப்பெருமாள்பேட்டையில் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் வளாகத்தில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கும் பா.ஜ.கவினர் அவர்களது […]

The post அரசு விழாவை சொந்தம் கொண்டாடும் பா.ஜ.க: காங்கிரஸ் உரிமை மீறல் புகார் appeared first on Puducherry News | Puducherry News Today.

மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் கடலுக்குச் சென்ற மீனவர்கள்

Wed, 16 Jun 2021 09:05:02 +0000

மீன்பிடி தடைகாலம் 61 நாட்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து, ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு புதுச்சேரி மீனவர்கள் செல்ல தொடங்கியுள்ளனர். கடலில் மீன் வளத்தைப் பெருக்க     ஏப்ரல்  மாதம் 15-ம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி   வரை   வங்கக் கடலில்   மீன்பிடி   தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது. தடைகாலம் காரணமாக கடந்த 2 மாதங்களாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு செல்லாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் விசை படகுகள் அனைத்தும் […]

The post மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் appeared first on Puducherry News | Puducherry News Today.

கொக்ககோலா நிறுவனத்திற்கு நேற்று ஒரே நாளில் 30,000 கோடி நஷ்டம்…

Wed, 16 Jun 2021 08:44:36 +0000

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அவர்கள் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது தனது மேஜை மேலிருந்த கோகோ கோலா பாட்டிலை தூக்கி ஓரமாக வைத்து விட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்து அனைவருக்கும் மேலே தூக்கிக் காட்டினார். இந்த வீடியோவின் மூலம் அவர்கள் அனைவரும் கோகோ கோலாவை தவிர்க்க வேண்டும் என்றும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் கூறியதாக வைரலானது. இது குறித்த வீடியோவை உலகம் முழுவதும் வைரலானதை அடுத்து, உலகம் முழுவதும் உள்ள […]

The post கொக்ககோலா நிறுவனத்திற்கு நேற்று ஒரே நாளில் 30,000 கோடி நஷ்டம்… appeared first on Puducherry News | Puducherry News Today.

உகான் ஆய்வுக்கூடத்தில் வவ்வால்கள்… வெளியான வீடியோ ஆதாரம்…

Wed, 16 Jun 2021 08:25:53 +0000

கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகமெங்கும் 17 கோடியே 53 லட்சம் பேரை பாதித்து, அதில் 38 லட்சம் பேரின் உயிர்களைப் பறித்திருக்கிறது. தொடர்ந்து மனித குலத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. மனித குலத்தை மட்டுமல்லாது பிற உயிர்களையும் கதிகலங்க வைத்து வருவது. சீனாவின் உகான் நகரில்தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் காணப்பட்டது. 2019ம் ஆண்டின் இறுதியில்தான் அங்கு காணப்பட்டது. உகான் நகரத்தின் மாமிச சந்தையில் இருந்து இந்த வைரஸ் உருவானது என்றும், உகான் வைரஸ் ஆய்வுக்கூடத்தில் […]

The post உகான் ஆய்வுக்கூடத்தில் வவ்வால்கள்… வெளியான வீடியோ ஆதாரம்… appeared first on Puducherry News | Puducherry News Today.

கரும்பூஞ்சை தொடர்ந்து பச்சை பூஞ்சை… அச்சத்தில் மக்கள்…

Wed, 16 Jun 2021 08:20:52 +0000

இந்தியாவில் கரும்பூஞ்சை தொற்றை தொடர்ந்து தற்போது பச்சை பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது கரும்பூஞ்சை தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நாடு முழுவதும் பலர் கரும்பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான மருந்துகள், படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்றிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்றை தொடர்ந்து, வெள்ளை மற்றும் மஞ்சல் பூஞ்சை தொற்றுகளும் ஒரு சிலருக்கு கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது பச்சை […]

The post கரும்பூஞ்சை தொடர்ந்து பச்சை பூஞ்சை… அச்சத்தில் மக்கள்… appeared first on Puducherry News | Puducherry News Today.

பாஜக எம்.எல்.ஏ. செல்வம் புதுச்சேரி சபாநாயகராக பதவியேற்பு

Wed, 16 Jun 2021 08:11:16 +0000

புதுச்சேரி சபாநாயராக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார். முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் சபாநாயகராக பதவி ஏற்பது இதுவே முதல் முறை. புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி சந்தித்த நிலையில், என்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவைக்கு […]

The post பாஜக எம்.எல்.ஏ. செல்வம் புதுச்சேரி சபாநாயகராக பதவியேற்பு appeared first on Puducherry News | Puducherry News Today.

புதுச்சேரி அமைச்சரவை விவகாரம்; வெளியான அறிவிப்பு.!!

Wed, 16 Jun 2021 08:01:47 +0000

புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி சந்தித்த நிலையில், என்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவைக்கு தேவையான மெஜாரிட்டி என்.ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்ததை புதுச்சேரியின் முதல் அமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ரங்கசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பிறகு, என்.ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணியிடையே அமைச்சரவை பகிர்ந்துகொள்ளுதல் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பாஜகவிற்கு சபாநாயகர், […]

The post புதுச்சேரி அமைச்சரவை விவகாரம்; வெளியான அறிவிப்பு.!! appeared first on Puducherry News | Puducherry News Today.

புதுச்சேரியில் 355 பேருக்கு கரோனா தொற்று:

Tue, 15 Jun 2021 12:31:14 +0000

புதுச்சேரியில் புதிதாக 355 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூன் 15) வெளியிட்டுள்ள தகவலில், ”புதுச்சேரி மாநிலத்தில் 9,017 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 265, காரைக்கால் – 77, ஏனாம் – 8, மாஹே – 5 என மொத்தம் 355 (3.94 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 5 பேர் சிகிச்சைப் […]

The post புதுச்சேரியில் 355 பேருக்கு கரோனா தொற்று: appeared first on Puducherry News | Puducherry News Today.

djega.in franceindia.com