Oneindia - thatsTamil

வெப்பத்தின் தாக்கம் குறையும் வரை பகலில் வெளியே நடமாட வேண்டாம்.. மத்திய அரசு அறிவுறுத்தல்

Mon, 17 Jun 2019 11:05:20 +0530

பாட்னா: நாடு முழுவதும் நிலவி வரும் வரலாறு காணாத வெப்பத்தால் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெப்பத்தின் தாக்கத்தால் கடந்த 2 நாட்களில் மட்டும், பல மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் கடும் வெயிலால், பீகார் மாநிலத்தில் மட்டும் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

புல்வாமாவில் மீண்டும் ஒரு பெரிய அட்டாக் நடத்த தீவிரவாதிகள் சதி.! இந்தியாவை எச்சரித்த பாக்.,

Mon, 17 Jun 2019 09:45:02 +0530

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கர சதி திட்டம் தீட்டி வருவதாக பாகிஸ்தான் உளவு நிறுவனம், இந்தியாவை உஷார் படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில், சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். புல்வாமா அருகே கோரிபோரா என்ற இடத்தில்

ரிலீஸாக போறார்னு கொளுத்தி போட்டது யார்.. விடுதலை நாளுக்காக நிஜமாகவே ஆசைப்படும் சசிகலா!

Mon, 17 Jun 2019 09:55:18 +0530

சென்னை: வடிவேலு ஒரு படத்துல சொல்லுவாரே, "நான் பாட்டுக்கு செவனேன்னுதானே கிடந்தேன்.. கவுரவம்.. கவுரவம்னு சொல்லி ஏன் இப்படி பண்ணிட்டீங்க" என்பதை போலவே சசிகலா ரிலீஸ் சம்பவமும் நாலாபக்கமும் பரவி, கடைசியில் அப்படி எதுவுமே இல்லாமல் போய்விட்டது! பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, முன்கூட்டியே விடுதலை ஆவார் என தகவல்கள் சில தினங்களுக்கு முன்பு

இது கொஞ்சம் கஷ்டம் தான்.. ஆனா, இப்டி சாப்பிட்டா பீட்சா ப்ரீ.. அமெரிக்க உணவகத்தின் வித்தியாசமான சவால்

Mon, 17 Jun 2019 10:35:45 +0530

கலிபோர்னியா: அமெரிக்க உணவகம் ஒன்றில் செல்போன் பார்க்காமல், தன் அருகில் இருப்பவர்களுடன் பேசிக் கொண்டே சாப்பிடுபவர்களுக்கு பீட்சா இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கையில் விரல்களில் ஒன்றாக கருதப்பட்ட செல்போன், இப்போது கைகளாக மாறி விட்டது என்று சொன்னால் அது மிகையில்லை. அந்தளவிற்கு எப்போதும் கையில் செல்போனுடன் தான் மக்கள் வலம் வருகின்றனர். ஒருசிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட

இதுக்கு பேரு தான் படிப்ஸ்... பிரசவம் ஆன அரை மணி நேரத்தில் எக்ஸாம் எழுதிய இளம்பெண்!

Mon, 17 Jun 2019 10:02:39 +0530

அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவில் பிரசவம் ஆன அரை மணி நேரத்தில் தேர்வு எழுதி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் பெண் ஒருவர். எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஊர் மேட்டு. அங்கு வசித்து வரும் அல்மான் டெரேஸ் என்ற 21 வயது பெண், திருமணத்திற்குப் பிறகும் படிப்பைத் தொடர்ந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான அவர் தனது தேர்வுக்காக படித்து வந்துள்ளார்.

கொல்கத்தா மருத்துவர்கள் மீதான தாக்குதல்.. தமிழகத்தில் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்

Mon, 17 Jun 2019 12:00:09 +0530

சென்னை: கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கியது. மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்துபடி பணியாற்றி வருகின்றனர். மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவமனையில் ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்புக்கு மருத்துவர்களின் கவனக்குறைவே

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி

Sun, 16 Jun 2019 21:59:24 +0530

ஸ்ரீநகர்: உலக கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதும் நிலையில், ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. போர் நிறுத்த ஒப்பந்ததிற்கு பிறகும், அடிக்கடி துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி

துபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6வயது இந்திய சிறுவன் மரணம்

Sun, 16 Jun 2019 18:46:38 +0530

கராமா: துபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6 வயது இந்திய சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பைசல் துபாயில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது 3 -வது மகன் முகம்மது பர்ஹான், அல்குவோஸ் என்ற இடத்தில் இயஙி வரும் இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் பயின்று வந்தார். பள்ளி வாகனத்தில்

2 ஹெல்மெட் இருக்கா... இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படும்.. போக்குவரத்துத் துறை அதிரடி

Sun, 16 Jun 2019 17:30:43 +0530

போபால்: இரண்டு புதிய ஹெல்மெட்கள் வாங்கி அதற்கான ரசீதை காண்பித்தால் மட்டுமே இனி இருசக்கர வாகனங்களை பதிவு செய்ய முடியும் என மத்திய பிரதேச போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துக்களில் 12,200 பேர் மரணத்தை தழுவியுள்ளனர். வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே,

தியாகத் தலைவர்களுக்கு பெரிய சல்யூட்...! #FathersDay

Sun, 16 Jun 2019 16:59:24 +0530

சென்னை: இன்று தந்தையர் தினம்.. உலகமெங்கும் அப்பாக்களைப் போற்றிப் புகழ்ந்து கொண்டுள்ளனர் பிள்ளைகள். அன்னையர் தினம், மகள்கள் தினம் வரிசையில் இன்று தந்தையர் தினம். இதையொட்டி நமது வாசகர் சண்முகப் பிரியா நமக்கு எழுதி அனுப்பியுள்ள ஒரு குட்டிக் கட்டுரை... One India நேயர்களுக்கு வணக்கம். இன்று சுமைகளை தாங்கிக்கொண்டு தன் குடும்பத்திற்காக உழைக்கும்

பீகாரை வாட்டுகிறது வெப்பம்.. 17 பேர் உயிழந்த பரிதாபம்

Sun, 16 Jun 2019 16:58:32 +0530

பாட்னா: பீகார் மாநிலம் கயாவில் கடும் வெயிலைத் தாங்க முடியாமல் 17 பேர் உயிரிழந்துள்ளனர். வெயிலால் பாதிக்கப்பட்ட 44 பேர் கயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 பேர் சிகிச்சை பலனின்றியும், 6 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். 44 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என

மே.வங்கத்தில் 6-வது நாளாக மருத்துவர்கள் போராட்டம் நீடிப்பு- அரசுடன் பேச்சு நடத்த தயார் என அறிவிப்பு

Sun, 16 Jun 2019 15:19:28 +0530

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பணி பாதுகாப்பு கோரி 6-வது நாளாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்பிரச்சனை குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். கொல்கத்தா என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் 2 பேரை சிகிச்சை பலனின்றி மரணமடைந்த நோயாளி ஒருவரது உறவினர்கள் கொடூரமாகத் தாக்கினர். இதனால் பயிற்சி மருத்துவர்கள்

சீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி

Sun, 16 Jun 2019 13:04:57 +0530

குவாங்டாங்: சீனாவில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக செஜ்ஜியாங், ஃப்யூஜியாங் உள்ளிட்ட ஏராளமான மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதுவரை வெள்ளத்தில் சிக்கி, 61 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 30-க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிர்கதியாக தவித்து நிற்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் தெற்கு

குவைத்தில் பதிவானதா உலகின் உச்சபட்ச வெப்பநிலை.! என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம்

Sun, 16 Jun 2019 10:56:05 +0530

குவைத்: இந்தியாவில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 45 முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதனை தூக்கி சாப்பிடும் விதமாக தற்போது குவைத்தில் 63 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வெளியான தகவல் அதிர வைத்துள்ளது. தற்போதைய நிலரவப்படி வளைகுடா நாடுகளான குவைத் மற்றும் சவுதி அரேபியாவில்

ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்

Sun, 16 Jun 2019 10:16:53 +0530

ஆலப்புழா: கேரள மாநில ஆலப்புழாவில் பணிமுடித்து விட்டு வீடு திரும்பிய பெண் காவலர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆலப்புழாவில் வள்ளிகுன்னம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் சவுமியா புஷ்பாகரன் (34). இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை 3-ஆவது வகுப்பு படித்து வருகிறார். சவுமியாவின் கணவர்

அயோத்தியில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் 18 எம்.பி.க்கள் வழிபாடு

Sun, 16 Jun 2019 10:07:56 +0530

அயோத்தி: ராமர் பிறந்த இடமான அயோத்தியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது கட்சியின் 18 எம்.பிக்கள் இன்று வழிபாடு நடத்தினர். லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது வெற்றி பெறும் எம்.பி.க்களுடன் தாம் அயோத்தியில் வழிபாடு நடத்துவேன் என அறிவித்திருந்தார் உத்தவ் தாக்கரே. இதனை நிறைவேற்றும் வகையில் இன்று காலை 18 எம்.பிக்கள் மற்றும் குடும்பத்தினருடன்

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை வாபஸ்.. மக்கள் நிம்மதி

Sun, 16 Jun 2019 11:49:29 +0530

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அது வாபஸ் பெறப்பட்டது. கெர்மடெக் தீவு என்பது மக்கள் அதிகம் வசிக்காத பகுதியாகும். இந்த தீவுகளுக்கு வடக்கே இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4-ஆக பதிவானது. இதையடுத்து அந்த இடத்தை சுற்றியுள்ள மக்கள் தெருக்களில்

அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை

Sat, 15 Jun 2019 20:17:56 +0530

கொல்கத்தா: மக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு மீண்டும் பணிக்கு திரும்புமாறு, மேற்குவங்க மாநில மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். மருத்துவரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் அமைந்துள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் சிலரை, கடந்த திங்கட்கிழமையன்று நோயாளி ஒருவரது உறவினர்கள் ஒன்று

மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம்.. பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் செயலால் நெகிழ்ச்சி

Sat, 15 Jun 2019 19:00:57 +0530

பஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் நடத்திய மாபெரும் திட்டமான மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம், இம்மாதம் கிம்ஸ் முகரக் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டுள்ளது பஹ்ரைன் வாழ் தமிழர்களுக்காக பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது கடல் கடந்து பஹ்ரைனில் வாழும் தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக

கையைத் தூக்குங்க.. அப்படியே நில்லுங்க.. சந்திரபாபு நாயுடுவை சோதனையிட்ட சி.ஐ.எஸ்.எப். படை!

Sat, 15 Jun 2019 18:35:27 +0530

விசாகப்பட்டனம்: சந்திரபாபு நாயுடுவை சோதனையிட்ட சி.ஐ.எஸ்.எப். படையினரால் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபர்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சோதனையிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூன்று முறை முதல்வர், மூன்று முறை எதிர்க்கட்சித் தலைவர், இசட் ப்ளஸ் பாதுகாப்பு பிரிவில் உள்ள

அயோத்தியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி... உளவுத் துறை எச்சரிக்கை!

Sat, 15 Jun 2019 17:29:55 +0530

அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் தீவிரவாத தாக்குதல் அபாயம் இருப்பதையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள ராமர் கோயில் பகுதி பதட்டம் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த நிலையில், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ்தாக்கரே தனது கட்சியை சேர்ந்த 18 எம்.பி.க்களுடன் நாளை அயோத்தியிலுள்ள ராமர் கோயிலுக்கு செல்கிறார். மேலும், ராமஜென்ம பூமி

மேற்குவங்கத்தில் ஒரே நாளில் 700 அரசு டாக்டர்கள் ராஜினாமா... மம்தாவுக்கு நெருக்கடி முற்றுகிறது!

Sat, 15 Jun 2019 15:45:18 +0530

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஒரே நாளில் 700க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் ராஜினாமா செய்ததால், மம்தா அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 11ந் தேதி உயிரிழந்தார். இதற்கு பயிற்சி மருத்துவர்கள் சரிவர கவனிக்காததே காரணம்

ஏன் சோபியா இப்படி செஞ்சீங்க.. தெரியாமதான் செஞ்சுட்டேன்.. ஒரு கலகல சம்பவம்

Sat, 15 Jun 2019 14:41:15 +0530

கோலாலம்பூர்: "ராத்திரி நேரம்.. ரோட்டோரம் ஒரு குட்டி இருந்தது... பாவம் அதுக்கு அடிபட்டு இருந்தது.. இரக்கப்பட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்.. அது நாய்க்குட்டின்னு தான் நினைச்சேன்.. கடைசியில பார்த்தால் இப்படி ஆயிடுச்சே.. " என்று போலீசில் புலம்பி தள்ளினார் சோபியா. மலேசியாவின் பிரபல பாடகிதான் ஸரித் சோபியா யாசின். வயசு 27 ஆகிறது. இப்போது இவர் ஒரு

கேமராவை கொடுப்பா.. லெட் அஸ் டேக் ஏ செல்பி.. இதுக்குப் பேர்தான் குரங்குச் சேட்டையோ!

Sat, 15 Jun 2019 12:58:53 +0530

பாலி: இந்தோனேஷியாவில் குரங்குகள் காட்டில் ஒரு குடும்பத்தினர் செல்பி எடுத்தபோது அங்கு வந்த குரங்கு அந்த கேமராவுக்கு போஸ் கொடுத்து செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் சிரிப்பை வரவழைக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் ஜூடி ஹிக்ஸ். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்காக இந்தோனேஷியாவில் உள்ள பாலிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி கணவர் சைமன், மூன்று குழந்தைகள்

ஒரே இடம்.. ஒன்னும் பண்ண முடியாது.. இம்ரான் கானுடன் மோடி சந்திப்பு.. பதிலுக்கு ஒரு சிரிப்பு

Fri, 14 Jun 2019 21:42:41 +0530

பிஷ்கேக்: கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறும், ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். கிர்கிஸ்தான் நாட்டுத் தலைநகர் பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி

ஜார்கண்ட்டில் மாவோயிஸ்ட்டுகள் வெறியாட்டம்.. மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு.. 5 போலீஸ்காரர்கள் பலி

Fri, 14 Jun 2019 20:32:17 +0530

ஜாம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாஷெட்பூர் அருகே மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 5 போலீசார் கொல்லப்பட்டனர். தலைநகர், ஜாம்ஷெட்பூரில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில், சரைகெலா மாவட்டத்தில் ஒரு உள்ளூர் சந்தையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ரோந்து சென்ற போலீசார் மீது திடீரென மாவோயிஸ்டுகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். மாவோயிஸ்டுகள், இரண்டு பேர்

பாகிஸ்தான் வான் வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!

Fri, 14 Jun 2019 17:06:34 +0530

இஸ்லாமாத்: பாகிஸ்தான் வான் வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்கான தடையை அந்நாட்டு அரசு நீட்டித்துள்ளது. காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, பிப்ரவரி 26ந் தேதி பாகிஸ்தானில் உள்ள பாலகோட்டில் இயங்கி வந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடியாக புகுந்து

மே.வங்கத்தில் வட இந்தியர்கள் வங்காள மொழிதான் பேச வேண்டும்: மமதா அதிரடி

Fri, 14 Jun 2019 16:13:40 +0530

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வட இந்தியர்கள் வங்காள மொழிதான் பேச வேண்டும் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அதிரடியாக வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத்திலும் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இந்தி மொழியை திணிப்பதையும் வட இந்தியர்கள் குடியேற்றத்துக்கும் எதிராகவும் மேற்கு வங்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

தெலுங்கு தேச எம்.எல்.ஏ-க்கள் என் கட்சிக்கு வந்தால் தகுதி நீக்கம் செய்யுங்கள்.. ஜெகன் மோகன் அதிரடி

Fri, 14 Jun 2019 16:08:06 +0530

விஜயவாடா: தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.எ.க்கள் யாரவது தங்களது கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு வந்தால் அவர்களை உடனே தகுதி நீக்கம் செய்து விடுமாறு சபாநாயகரிடம் கூறியுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெருவெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. தொடர்ந்து ஆந்திர சட்டபேரவையில்

பீகாரில் மூளைக் காய்ச்சல் பாதிப்பால் 57 பேர் மாண்டனர்.. 49 குழந்தைகளும் பலியானதால் சோகம்

Fri, 14 Jun 2019 14:13:59 +0530

முசாபர்பூர்: பீகார் மாநிலத்தில் மூளைக் காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனைகளில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. முசாபர்பூரில் கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 49 குழந்தைகளும், மற்றொரு மருத்துவமனையில் 8 பேரும் இதுவரை மூளைக் காய்ச்சல் பாதிப்பிற்கு பலியாகியுள்ளனர். உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக முசாபர்பூர் மாவட்டdjega.in franceindia.com