Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil

40 கோடியை கடந்த ஜன் தன் வங்கிக் கணக்கு.. ரூ. 1.30 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட்..!

Mon, 03 Aug 2020 19:32:45 +0530

டெல்லி: ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்குவோரின் எண்ணிக்கை 40 கோடியை கடந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதோடு இந்த வங்கிக் கணக்கில் 1.30 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்குவோர் குறைந்தபட்ச இருப்பு என எதுவும் வைக்க

சரிவில் பொருளாதாரம்! சாட்சி சொல்லும் PMI!

Mon, 03 Aug 2020 18:56:18 +0530

கொரோனா வைரஸ் பிரச்சனை உலகில் எந்த ஒரு நாட்டையும் விட்டு வைத்ததாகத் தெரியவில்லை. அமெரிக்கா தொடங்கி ஆப்கானிஸ்தான் வரை பாரபட்சம் இல்லாமல் எல்லா நாட்டு பொருளாதாரத்தையும் அடித்து நொறுக்கி இருக்கிறது. இதில் இந்தியா மட்டும் என்ன பெரிய விதி விலக்கை கண்டு இருக்க முடியும். இந்திய பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது என்பதை உறுதி

மூனு மடங்கு லாபம் அதிகரிப்பு.. பேங்க் ஆப் இந்தியா லாபம் ரூ.844 கோடியாக அதிகரிப்பு..!

Mon, 03 Aug 2020 18:36:39 +0530

மும்பை: பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா திங்கட்கிழமையன்று அதன் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான லாபம் மூன்று மடங்கு அதிகரித்து, 843.60 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது அதிகளவிலான மற்ற வருவாய் காரணமாக இந்த லாபம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வங்கி முந்தைய ஆண்டு இதே காலாண்டில்

இந்திய ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப்பெரிய பாதிப்பு..!

Mon, 03 Aug 2020 17:40:01 +0530

ஸ்மார்ட்சிட்டி, வீட்டு வசதி திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம் என இந்தியாவில் வேகமாக வளர்ந்து வந்த ரியல் எஸ்டேட் துறை கொரோனாவால் வழி தெரியாமல் நிற்கிறது என்றால் மிகையில்லை. ஆம் அதிலும் குறிப்பாகக் கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊழியர்களுக்கு Work From Home சலுகை கொடுக்கப்பட்டதால் Office Leasing சந்தை மிகப்பெரிய பாதிப்பை வெறும் 6

மீண்டும் ரூபாயின் மதிப்பு ரூ.75.01 ஆக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணுமோ?

Mon, 03 Aug 2020 16:55:00 +0530

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 20 பைசா குறைந்து, 75.01 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடைசியாக ஜூலை 17 அன்றும் காணப்பட்டது. ஆக இவ்வாறு இரண்டு வாரத்தில் இல்லாத அளவுக்கு மீண்டும் ரூபாயின் மதிப்பானது வீழ்ச்சி கண்டுள்ளது. முந்தைய நாள் வர்த்தகத்தில் 74.82 ரூபாயாக முடிவடைந்துள்ள நிலையில், இன்று ரூபாயின் மதிப்பானது

அடுத்தடுத்து திவாலாகும் ஜீன்ஸ், டெனிம் நிறுவனங்கள்.. காரணம் என்ன..?

Mon, 03 Aug 2020 16:53:03 +0530

ஆண்கள் வேட்டி சட்டையில் இருந்தும், பெண்கள் சுடிதார், பாவாடை தாவணி இருந்தும் மாறி தற்போது அதிகளவில் ஜீன்ஸ் பேன்ட் அணிவது வாடிக்கையாக உள்ளது. இப்படி உலகம் முழுவதும் ஜீன்ஸ் மற்றும் டெனிம் ஆடைகளை விரும்பி அணிவதால் இது மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறியுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களில் மட்டும் பல ஜீன்ஸ் நிறுவனங்கள் திவாலாகியுள்ளது

ரபேல் வேகத்தில் உயரே பறக்கும் தங்கம் விலை! எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?

Mon, 03 Aug 2020 12:41:14 +0530

சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரண தங்கத்தின் விலை, மீண்டும் ஒரு வரலாற்று உச்சமாக 56,500 ரூபாய்க்கு நேற்று விற்பனை ஆகி இருக்கிறது. அதே சிங்காரச் சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, 51,790 ரூபாய் என்கிற மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. இது போக எம் சி எக்ஸ்

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ராக்கி.. சீனாவுக்கு ரூ.4000 கோடி நஷ்டம்.. !

Mon, 03 Aug 2020 18:51:49 +0530

டெல்லி: இந்திய சீனா எல்லை பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்தே #boycott china, #BoycottChineseProducts என்ற பரப்புரைகள் பரவலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 10 அன்று அகில இந்திய வர்த்தகர்கள் சங்கம் இந்த ஆண்டு இந்துஸ்தான் ராக்கியை கொண்டாட வாருங்கள் என்று அழைப்பு விடுத்தது. அதாவது இந்த ஆண்டு ராக்கி விழாவில் சீன ராக்கிகளையோ

பந்தன் வங்கியின் பங்கு விலை 9% வீழ்ச்சி.. என்ன காரணம்..!

Mon, 03 Aug 2020 11:04:33 +0530

சிறிய நிதி நிறுவனமான தொடங்கப்பட்ட பந்தன் வங்கி, இன்று மிகப்பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது. இது தற்போது அதன் கணிசமான பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அதன் பங்கு விலையானது 9.66 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 311.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது கிட்டதட்ட 33 ரூபாய் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

IT ஊழியர்களுக்கு இது பிரச்சனை தான்.. முதலில் விசா தடை.. தற்போது கட்டணம் அதிகரிப்பு..!

Sun, 02 Aug 2020 18:08:51 +0530

சமீப வாரங்களாக ஐடி துறை பற்றிய செய்திகள் பெரியளவில் வரவில்லை எனலாம். அப்படியே வந்திருந்தாலும் அது நிறுவனங்களுக்கு சாதகமான காலாண்டு முடிவுகளாகத் தான் இருந்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் ஊழியர்களுக்காக வழங்கப்படும் குடியுரிமை அல்லாத விசாவான ஹெச் 1பி விசாவை தடை செய்தது. இது இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என்றும் அமெரிக்கா

ரூ.1.38 லட்சம் கோடி அவுட்.. முதலீட்டாளர்கள் பாவம்.. லிஸ்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் பர்ஸ்ட்..!

Sun, 02 Aug 2020 14:42:15 +0530

டெல்லி: சந்தையில் ஏற்றம் இறக்கம் என்பது சகஜமான ஒன்றாக இருந்தாலும், இது கொரோனா மத்தியில் ஏற்கனவே பெரிய இழப்பினை சந்திதுள்ள சந்தை, கடந்த வாரத்திலும் சரிந்துள்ளது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 522 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது. இது 1.36% சரிவாகும். இந்த நிலையில் அதிக சந்தை மதிப்பினை உடைய 10 நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் 1,38,839.83 கோடி ரூபாயினை இழந்துள்ளன.

சீனாவுக்கு இது செம அடியாகத் தான் இருக்கும்.. இந்தியாவுக்கு வர 22 நிறுவனங்கள் ஆர்வம்..!

Sun, 02 Aug 2020 11:58:27 +0530

இந்தியாவில் தங்களது மொபைல் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்காக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், ஆப்பிள் இன்க் உள்ளிட்ட 22 நிறுவனங்கள், 110 பில்லியன் ரூபாயினை முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன. இது குறித்து வெளியான ஒரு செய்தியில், ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமம், விஸ்ட்ரான் கார்ப் மற்றும் பெகட்ரான் கார்ப், பல ஐபோன் அசெம்பிளர்கள் என பலரும் இதில் அடங்கும். இதன்

தரை தட்டும் இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதி!

Sat, 01 Aug 2020 21:01:01 +0530

இந்தியாவில், ஜூன் 2020-ல் 13.68 மில்லியன் டன் கச்சா எண்ணெய் மட்டுமே இறக்குமதி செய்து இருக்கிறார்களாம். கடந்த பிப்ரவரி 2015-க்குப் பிறகான காலத்தில் இந்த அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி சந்தித்ததே இல்லையாம். கடந்த ஜூன் 2019-ல் இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்யை விட, இந்த ஜூன் 2020-ல் 19 சதவிகிதம் குறைவாகவே

'கடன்' கொடுக்க இதுதான் சரியான நேரம்: எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் அதிரடி

Sat, 01 Aug 2020 19:15:12 +0530

இந்திய வங்கிகள் தற்போது ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கடன் சலுகை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சலுகையைப் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் நாட்டில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மோசமான நிலையில் இருக்கும் காரணத்தால் இந்திய வங்கிகளில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள கடன் பெருமளவு வராக்கடனாக மாறும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் முன்னணி

பொதுத் துறை வங்கிகளில் 26% பங்குகளை அரசு வைத்துக் கொண்டால் போதும்! ஆர்பிஐ ஆலோசனை!

Sat, 01 Aug 2020 16:52:45 +0530

மத்திய அரசு, ஏற்கனவே போதுமான வருவாய் இல்லாமல் போராடிக் கொண்டு இருந்தது. இந்த 2020 - 21 நிதி ஆண்டின் தொடக்கமே கொரோனா வைரஸ் வேறு வந்துவிட்டதால், ஒட்டு மொத்த நிதி நிலைமையும் மோசமாகிக் கொண்டே போகிறது. இந்த பஞ்சாயத்துக்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, 23 அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்று, கணிசமாக பணத்தை திரட்டும்

பெட்டி பெட்டியாகச் சரக்கு வாங்கும் மக்கள்.. கொரோனா-வால் மிகப்பெரிய மாற்றம்..!

Sat, 01 Aug 2020 15:36:08 +0530

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் வர்த்தகம் மற்றும் உற்பத்தி அனைத்தும் முடங்கிய நிலையில், மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே லாக்டவுன் காலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த லாக்டவுன் காலத்தில் நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்து அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடும் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் பொருட்கள் கிடைக்கும் நேரத்தில்

தம் கட்டி விரட்டும் ஜியோ! இப்போதும் முன்னணியில் ஏர்டெல்!

Sat, 01 Aug 2020 14:00:36 +0530

இந்தியாவில் செல்போன் வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதாகச் செய்திகள் நிறைய வருகின்றன. இந்திய டெலிகாம் வியாபாரம் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து நிறைய மாற்றங்களை அதிவிரைவாகச் சந்தித்துக் கொண்டு இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்தியாவில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த ஏர்செல், யுனினார், டாடா டொகொமோ போன்ற பல கம்பெனிகளும், இன்று டெலிகாம் வியாபாரத்தில் இல்லை. கடந்த

ஹோட்டல் & உணவகங்களுக்கு EMI Moratorium நீட்டிப்பு தொடர்பாக ஆர்பிஐ உடன் பேச்சு! நிதி அமைச்சர்!

Sat, 01 Aug 2020 12:32:10 +0530

இந்தியாவில், பொதுவாக வங்கி வாடிக்கையாளர்கள் வாங்கி இருக்கும் கடனுக்கு, செலுத்த வேண்டிய இ எம் ஐ தவணைகளை, ஒத்திவைக்க, கடந்த மார்ச் 2020-ல் இருந்து அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த இ எம் ஐ ஒத்திவைப்பு கால அவகாசம் ஆகஸ்ட் 31, 2020 உடன் ஒரு முடிவுக்கு வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையால், விருந்தோம்பல் துறை

சன் பார்மா ரூ.1,656 கோடி நஷ்டம்.. ஜூன் காலாண்டில் பலத்த அடி தான்..!

Fri, 31 Jul 2020 20:59:24 +0530

சன் பார்மா நிறுவனம் ஜூன் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர இழப்பாக 1,655.6 கோடி ரூபாயினை பதிவு செய்துள்ளது. சன் பார்மாவின் துணை நிறுவனமான டாரோ பார்மாசூட்டிகல் லிமிடெட் மூலம் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஒரு வழக்கில் சிக்கிய இந்த நிறுவனம், அமெரிக்கா அரசுக்கு இழப்பீடு கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக சன் பார்மா நிறுவனம் அறிவித்துள்ளது.

பெருத்த அடி வாங்கிய டாடா மோட்டார்ஸ்.. ஒருங்கிணைந்த நஷ்டம் ரூ.15,876 கோடி..!

Fri, 31 Jul 2020 18:23:15 +0530

மும்பை: நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பெருத்த அடி வாங்கியுள்ளது எனலாம். ஏனெனில் ஜூன் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர இழப்பு 15,876 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு கண்ட நஷ்டத்தினை விட நான்கு மடங்கு அதிகமாகும்.

வெறித்தனம் வெறித்தனம்..! முரட்டு லாபத்தில் ரிலையன்ஸ் ஜியோ! ஆனால் ஒரு வருத்தம்!

Fri, 31 Jul 2020 17:59:39 +0530

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, தான் ரிலையன்ஸ் சாம்ராஜ்யத்தில் அடுத்த வாரிசு கணக்காக வளர்ந்து வருகிறது. கடந்த மார்ச் 2020-ல் ரிலையன்ஸ் கம்பெனியின் பங்கு விலை சுமாராக 867 ரூபாய் வரை சரிந்தது. அடுத்த சில மாதங்களுக்குள் 2,198 ரூபாய் வரை அதிகரித்து இருக்கிறது என்றால், அதற்கு முழு முதல் காரணம் ரிலையன்ஸ் ஜியோ பங்குகளை விற்று

சீனாவுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா.. சோலார் பாதுகாப்பு வரிக்கு கிடுக்குபிடி.. செம பிளான்..!

Fri, 31 Jul 2020 13:34:24 +0530

இந்தியா சீனா இடையேயான வர்த்தக உறவானது நாளுக்கு நாள் சற்று கடினமாகிக் கொண்டே வருகிறது. ஒரு புறம் வரி அதிகரிப்பு, கட்டுப்பாடுகள் அதிகரிப்பு, இப்படி பலவகையிலும் சீனாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்தியா. இது இந்தியா சீனா எல்லை பிரச்சனையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில், தொடர்ச்சியாக ஒவ்வொரு துறையிலும்

சீனாவுக்கு அடுத்த செக்.. மத்திய அரசின் செம மூவ்.. கலர் டிவிகளுக்கு கடும் கட்டுப்பாடு..!

Fri, 31 Jul 2020 12:47:04 +0530

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புகைச்சலானது கல்வான் பள்ளதாக்கிற்கு பின்பு சற்று அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. எனினும் இந்தியா சீனாவுக்கு எதிரான நடவடிக்கையாக இதனை கருதவில்லை. இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் சில நாடுகளுக்கு பிரச்சனை தான் என்றாலும், அதிகம் பாதிக்கப்பட போவது சீனா தான், ஏனெனில்

ஏமாற்றம் தந்த தங்கம் விலை.. மீண்டும் வரலாற்று உச்சத்தினை நோக்கி ஏற்றம்.. இனி எப்போது தான் குறையும்!

Fri, 31 Jul 2020 12:49:19 +0530

வாவ் பரவாயில்லேயே தங்கம் விலை குறைஞ்சிருக்கே என்று சற்றே ஆறுதல் அடைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் புதிய உச்சத்தினை நோக்கி படையெடுத்துள்ளது தங்கம் விலை. டாலரின் மதிப்பானது வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், அது தங்கம் விலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. போதாக்குறைக்கு இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக நாளுக்கு நாள் கொரோனா வழக்குகளும் அதிகரித்து வருகின்றன.

ஜூன் காலாண்டில் ரொம்ப மோசம்.. ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 41% வீழ்ச்சி.. காரணம் இந்த லாக்டவுன்..!

Thu, 30 Jul 2020 20:21:38 +0530

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 45 நாட்கள் நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்ட நிலையில், உற்பத்தி மற்றும் விற்பனை இரண்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 41% வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும் இந்த ஆண்டின் கடைசி இரு காலாண்டுகளில் இது புத்துயிர் பெற வாய்ப்புள்ளதாக சிஎம்ஆரின் இந்தியா மொபைல் ஹேண்ட்செட் சந்தை தெரிவித்துள்ளது.

பிரமாதப்படுத்திய HDFC! ஜூன் 2020 காலாண்டிலும் வட்டி வருமானத்தில் வளர்ச்சி!

Thu, 30 Jul 2020 19:08:49 +0530

ஹவுசிங் டெவலெப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (Housing Development Finance Corporation), சுருக்கமாக HDFC என்று அழைக்கப்படும் வீட்டுக் கடன் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன. HDFC கம்பெனியின் ஜூன் 2020 காலாண்டு முடிவுகள் இன்று வெளியானது. இந்த ஜூன் 2020 காலாண்டில், ஜூன் 2019 காலாண்டில் ஈட்டிய லாபத்தை விட குறைவாகவே லாபம் ஈட்டி

தங்கம் விலை வீழ்ச்சியா.. காலையில் வரலாற்று உச்சம்.. தற்போது தங்கம் விலை ரூ.287 வீழ்ச்சி..!

Thu, 30 Jul 2020 18:51:36 +0530

கடந்த சில வாரங்களாகவே அதிகரித்து வந்த தங்கம் விலையானது இன்றும் காலையில் சற்று ஏற்றம் கண்டு தற்போது மீண்டும் வீழ்ச்சி கண்டுள்ளது. இது இன்று காலையில் ஆல் டைம் ஹையான 53,429 ரூபாயினை தொட்டு பின்பு சரியத் தொடங்கியுள்ளது. இது புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவுக்கு தங்க கவுன்சில் சொன்ன நல்ல விஷயம்.. தங்கம் ஆபரண தேவை 74% வீழ்ச்சி.. !

Thu, 30 Jul 2020 17:34:07 +0530

டெல்லி: தங்கம் விலையானது ஒரு புறம் வரலாறு காணாத புதிய உச்சத்தினை தொடர்ந்து தொட்டு வருகின்றது. இதற்கிடையில் தங்கம் இறக்குமதியும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின் படி, தங்க ஆபரணத் தேவையானது ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டு வரையில் 74% வீழ்ச்சி கண்டு 44 டன்னாக

சிக்கலாகும் GST! ஜிஎஸ்டி நஷ்டஈடு கொடுக்க முடியாதுங்க! கைவிரித்த மத்திய அரசு!

Thu, 30 Jul 2020 16:21:40 +0530

கடந்த 01 ஜூலை 2017-அன்று தடபுடலாக GST வரியை அமல்படுத்தியது மத்திய அரசு. GST வரியை அமல்படுத்தும் போது, மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி நஷ்ட ஈடு (GST Compensation) தொகை வழங்கப்படும் என்று சொன்னது மத்திய அரசு. ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்து, சரியாக 3 வருடங்கள் தான் கடந்து இருக்கிறது. அதற்குள் மாநில அரசுகளுக்கு வழங்க

அனில் அம்பானியின் பரிதாப நிலை.. வங்கிக் கடனுக்காக அலுவலகத்தினை மீட்க யெஸ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

Thu, 30 Jul 2020 15:35:48 +0530

மும்பை: ஒரு காலத்தில் பில்லியனராக கொடிகட்டி பறந்த அனில் அம்பானி, கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து தற்போது பெரும் கடன் பிரச்சனையில் தத்தளித்து வருகிறார். ஏற்கனவே கடன் பிரச்சனை காரணமாக தனது சில சொத்துக்களை எல்லாம் விற்று, கடனை அடைத்து வந்தார். இவரின் சில நிறுவனங்கள் திவால் நிலைக்கே கூட தள்ளப்பட்டுள்ளன. இப்படி தொடர்ந்து அடியாகவே வாங்கி வரும்
djega.in franceindia.com